இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்

இந்திய அரசுச் சட்டம் 1935

                         இந்திய அரசியலமைப்பின் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேல் இந்திய அரசுச் சட்டம் 1935 இல் இருந்து எடுக்கப்பட்டது.
அரசியலின் அடிப்படை அமைப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான உறவு, கூட்டாட்சி முறை ,கூட்டாட்சித் தத்துவத்தின் கூடிய நீதித்துறை, அவசர நிலை பிரகடனம் மற்றும் ஆளுநரின் அலுவலகம் தொடர்பான உடன்படிக்கை இச்சட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆங்கிலேயே அரசியலமைப்பு   

             சட்டத்தின் விதி முறைகள், பாராளுமன்ற ஆட்சி முறை, சட்டம் இயற்றும் நடைமுறைகள் ,ஒற்றைக் குடியுரிமை முறை ஆகியவை ஆங்கிலேய அரசியலமைப்பிலிருந்து இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க அரசியலமைப்பு     

                அடிப்படை உரிமைகளின் மீதான மசோதா ,நீதித்துறையின் சுதந்திரம், சட்டம் தொடர்பான மறுபரிசீலினை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நீக்கும் முறை, குடியரசுத் தலைவரை முடிவுகள் எடுக்க கூடிய தலைவராகவும், துணை குடியரசுத் தலைவரை மாநிலங்களவையின் ஆலோசனை சபை தலைவராகவும் நியமித்தல் ஆகியவை தொடர்பான உடன்பாடுகள் கொண்டிருக்கும்.

ஆஸ்திரேலிய அரசியலமைப்பு

               ஒத்துழைப்போடு கூடிய கூட்டாட்சி, பாராளுமன்ற முன்னுரிமைகள், வியாபாரம் வணிகம் மற்றும் பரிமாற்றம் ,ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகின்ற பொதுப்பட்டியல் ஆகியவை தொடர்பான உடன்படிக்கை ஆஸ்திரேலிய அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

கனடாவின் அரசியலமைப்பு

                  மாநிலங்கள் இடையேயான உறவு, வலிமையான மத்திய அரசுடன் கூடிய கூட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது,எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பது, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை வழங்கும் அதிகாரம், ஆளுநரின் நியமனம் ஆகியவை தொடர்பான உடன்படிக்கை கனடாவின் அரசியலமைப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஜெர்மனியின் வெய்மர் அரசியலமைப்பு

           அவசரநிலைப் பிரகடனத்தின்போது அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நீக்கும் உடன்பாடுகள் ,ஜெர்மனியின் வெய்மர் அரசியலமைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டன

  ஐரிஷ் அரசியலமைப்பு

           குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை, மாநிலங்களவை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமித்தல், அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

ரஷ்யாவின் அரசிலமைப்பு

         அடிப்படை கடமைகள் ரஷ்யாவின் அரசியலமைப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிரான்ஸ் அரசியலமைப்பு

        குடியரசு ,சுதந்திரம் ,சமத்துவம் சகோதரத்துவம் போன்ற முன்னுரையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் பிரான்ஸ் அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.


தென் ஆப்பிரிக்கா அரசியலமைப்பு
           
                 அரசியலமைப்பு சட்டத் திருத்தம், ராஜ்யசபா உறுப்பினர்களின் தேர்தல் முறை ஆகியவை தென்னாப்பிரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன.

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.