9th std tamil -25 Q and A

1.தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை எங்கு நடத்தி வருகிறது?

                மாமல்லபுரம்

2.உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் எங்கெல்லாம் அமைந்துள்ளன?

சுவாமிமலை, கும்பகோணம் ,மதுரை

3.சிற்பக் கலையை எங்கு உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளில் பயிலலாம்?
       சென்னை ,கும்பகோணம்

4.சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் எந்த நூலை வெளியிட்டுள்ளது ?

              சிற்ப செந்நூல்

5.செப்புத் திருமேனிகள் பொற்காலம் என்று அழைக்கப்படுவது எந்த காலம்?           

              சோழர் காலம்

6.ராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சி பொறி ,உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர் யார்?

          பேரறிஞர் அண்ணா

7.இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது ?
                           5

8.ராவண காவியத்தில் உள்ள காண்டங்கள் என்னென்ன ?
          1.தமிழக காண்டம்
          2. இலங்கைக் காண்டம்
          3.விந்தக் காண்டம்
          4. பழிபுரி காண்டம்
          5.போர் காண்டம்

9.இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

                          3100

10.புலவர் குழந்தை யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?

        தந்தை பெரியார்

11.யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்தவர் யார்?
             புலவர் குழந்தை

12.சதிர் என்பதன் பொருள் என்ன?           

                 நடனம்

13.நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது? 
                       
                             140

14.தி ஜானகிராமன் ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் எந்த வார இதழில் எழுதினார்?
          சுதேசமித்திரன்(1967)

15.தி ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லோவாகியா சென்ற அனுபவங்களை எந்த தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்?

      கருங்கடலும் கலைகடலும்

16.காவிரிக்கரை வழியான பயணத்தை எந்த தலைப்பில் தி ஜானகிராமன் நூலாக வெளியிட்டார் ?

        நடந்தாய் வாழி காவேரி

17.அடுத்த வீடு ஐம்பது மைல் என்பது யாருடைய பயணக் கட்டுரை?

           தி ஜானகிராமன்

18.தஞ்சை மண் வாசனையுடன் கதைகளை படைத்தவர் யார்?

           தி ஜானகிராமன்

19.தி ஜானகிராமன் என்னென்ன பணிகளில் பணியாற்றினார்?

உயர்நிலை பள்ளி ஆசிரியர் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளர்

20.தி ஜானகிராமன் எழுதிய கதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தன? *மணிக்கொடி
*கிராம ஊழியன்
*கணையாழி
*கலைமகள்
*சுதேசமித்திரன்
*ஆனந்தவிகடன்
*கல்கி

21.அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்னும் கோட்பாட்டை கொண்டவர் யார்?
தி ஜானகிராமன்

22.தி ஜானகிராமன் எழுதிய செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?
      சிவப்பு ரிக் ஷா

23.தஞ்சாவூரில் பிறந்த தமிழ் அறிஞர்கள் யார் யார்?
*உ.வே. சாமிநாதர்
*மௌனி
*ஜானகிராமன்
*தஞ்சை பிரகாஷ்
*தஞ்சை ராமையாதாஸ்
*தஞ்சாவூர் கவிராயர்

24.நாதஸ்வரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது?
600 ஆண்டுகளுக்கு முன்பு

25.நாகசுரக் கருவி எந்த மரத்தில் இருந்து செய்யப்படுகிறது?
       ஆச்சா மரம்

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.