11th std tamil-new book-QA-இயல்-7

1)பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது எந்த கோபுரம்?

கேரளாந்தகன் கோபுரம்

2)எதன் நினைவாக கேரளாந்தகன் வாயில் கோபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது?

ராஜராஜன் 988 இல் சேரநாட்டை வெற்றிகொண்டதை போற்றும் வகையில்

3)கருவறையை எவ்வாறு அழைப்பர் ?

அகநாழிகை

4)நம் நாட்டில் உள்ள கற்றளி கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எந்த கோவில்?

தஞ்சை பெரிய கோவில்

5)செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு என்ன பெயர்?

🌟 கற்றளி

6)ராஜராஜசோழன் எத்தனை ஆண்டுகள் முயன்று தஞ்சை பெரிய கோவிலை கட்டினான்?

🌟 ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்

7)தஞ்சை பெரிய கோவில் விமானம் ராஜராஜ சோழனால் எவ்வாறு அழைக்கப்பட்டது?

🌟தட்சிண மேரு

8)தஞ்சை பெரிய கோயிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது ?

216

9)தஞ்சை பெரிய கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?

⭐ 13

10)கற்றளி வடிவம் எந்த மன்னனால் உருவாக்கப்பட்ட வடிவம் ?

இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏழாம் நூற்றாண்டு)

11)கற்றளி கோவில்களுக்கு எடுத்துக்காட்டு தருக ?

மகாபலிபுரம் கடற்கரை கோவில்

⭐காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

⭐பனைமலை கோவில்

12)தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு வரை கட்டினார் ?

1003 -1010

13)தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு எப்போது நிறைவடைந்தது?

⭐2010

14)மண்ணால் கட்டப்பட்டு மேலே மரத்தால் சட்டமிட்ட கோவில்களுக்கு எடுத்துக்காட்டு தருக ?

தில்லைக் கோவில்

⭐குற்றாலநாதர் கோவில்

15)செங்கற்களை அடுக்கி சோழன் செங்கணான் எத்தனை கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்?

78

16)செங்கல், சுண்ணம், மரம் உலோகம் முதலியவை இல்லாமல் பிரம்ம விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்மன்  குடைவரைக் கோயில்களை அமைத்ததாக எந்த கல்வெட்டு கூறுகின்றது ?

மண்டகப்பட்டு கல்வெட்டு

17)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் யாரால் கட்டப்பட்டது?

இராஜ சிம்மன்

18)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

ராஜ சிம்மேச்சுரம்

19)கட்டிடக்கலை என்பது உறைந்துபோன இசை என்று குறிப்பிட்டவர் யார் ?

பிரடிரிகா வொன்ஸ் லீவிங்

20)இந்திய கட்டிடக்கலை பாணியில் எவ்வாறு பிரிப்பர் ?

நாகரம்
⭐வேசரம்
⭐திராவிடம்

21)தஞ்சை பெரிய கோவில் எந்த கலைப்பாணியை சேர்ந்தது?

எண் பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணி

22)ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார் என்பதை உறுதிப்படுத்திய அறிஞர் யார்?

ஷூல்ஸ் (ஜெர்மனி ) - 1886 இல்

23)தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களிலும் சுற்று கூடம், சாந்தார நாழியில் பகுதி சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார் ?

எஸ் கே கோவிந்தசாமி(1930 இல் கண்டறிந்தார்)

24)தஞ்சை பெரிய கோவிலின் கருவறையில் வரையப்பட்டிருந்த ஓவியங்களுக்கு என்ன வகை ஓவியங்கள் என்று பெயர்?

ஃ பிரஸ்கோ வகை ஓவியங்கள்

25)ஃப்ரெஸ்கோ என்பது எந்த மொழிச்சொல்?

இத்தாலிய சொல்

26)  ஃப்ரெஸ்கோ என்பதற்கு என்ன பொருள்?

புதுமை

27)ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களை எந்தெந்த இடங்களில் காண இயலும்?

அஜந்தா
எல்லோரா
⭐சித்தன்னவாசல்

28)தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தியும், மண்டபமும் எந்த காலத்தை சேர்ந்தது?

நாயக்கர் காலம்

29)பதிமூன்று தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சு பழத்தைப் போன்று 8 கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டது. அந்தக் கல்லின் பெயர் என்ன?

பிரமந்திரக் கல்

30)வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்த மன்னன் யார்?
ராஜராஜன்

31)  நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு யார் காலத்திலிருந்து தொடங்கியது?

இரண்டாம் குலோத்துங்க சோழன்

32).ராஜராஜனின் பட்டத்தரசி ஒலோக மாதேவி திருவையாற்றில் கட்டிய கோவில் எவ்வாறு அழைக்கப்படும்?

⭐ ஒலோக மாதேவீச்சரம்

33)ஒலோக மாதேவீர்ச்சரம் கோவில் கல்வெட்டில் பெண் அதிகாரியை ப் பற்றி எவ்வாறு குறிப்பிடப் படுகிறது?

எருதந் குஞ்சர மல்லி.

34)முதலாம் ராஜாதி ராஜன் காலத்தில் குறுப்பிடப்பட்டுள்ள பெண் அதிகாரியின் பெயர் என்ன?
சோமயன் அமிர்த வல்லி.

35) தஞ்சைப் பெரிய கோவிலில் குறிப்பிடப்ட்டுள்ள தச்சர்களின் பெயர் என்ன?

⭐வீர சோழன் குஞ்சர மல்லன் இராசராசப் பெருந்தச்சன்

⭐மதுராந்தகனான நித்த வினோத பெருந்தச்சன்

⭐இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்

36)ஆத்மாநாம் அவர்களின் இயற்பெயர் என்ன?

மதுசூதனன்

37)ஆத்மாநாமின் முக்கியமான கவிதைத் தொகுப்பு எது?

காகிதத்தில் ஒரு கோடு.

38) ஆத்மாநாம் நடத்திய சிற்றிதழ் பெயர் என்ன?

⭐ ழ

39)கொத்து என்பதன் பொருள் என்ன ?
பூமாலை

40) குழல் என்பதன் பொருள் என்ன?
⭐கூந்தல்

41)நாங்கூழ் என்பதன் பொருள் என்ன?

மண்புழு

42) கோலத்து நாட்டார் என்பதன் பொருள் என்ன?

கலிங்க நாட்டார்

43)வரிசை என்பதன் பொருள் என்ன?

சன்மானம்

44)தமிழ்நாட்டில் குற்றாலம் என்னும் ஊர் எங்கு அமைந்துள்ளது?

தென்காசி அருகே

45)திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதை கிரீடம் என்று போற்றப்படும் நூல் எந்த நூல் ?

குற்றால குறவஞ்சி

46)குற்றால குறவஞ்சி என்னும் நூல் யாருடைய விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது?

மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார்

47)திரிகூடராசப்பக் கவிராயர் எந்த ஊரை சேர்ந்தவர்?

திருநெல்வேலி

48)திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பெயர் பெற்றவர் யார் ?

திரிகூட ராசப்ப கவிராயர்

49) திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தின் மீது எந்தெந்த நூல்களை இயற்றியுள்ளார்?

தலபுராணம்
⭐மாலை
⭐சிலேடை
⭐பிள்ளைத்தமிழ்
⭐யமக அந்தாதி

50)மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகையின் பெயர் என்ன?

திருச் சாழல்

51)சாழல் என்பது என்ன ?

பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு

52)சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தை எழுதியவர் யார்?

மாணிக்கவாசகர்

53) சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் அமைந்துள்ளது?

எட்டாம் திருமறை

54)திருவாசகத்தில் எத்தனை திருப் பதிகங்கள் உள்ளன?

51

55)திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அடங்கி உள்ளன?

658

56)திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பெற்றுள்ளன?

38

57)திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜி யு போப்

58)  திருச்சாழல் எந்த கோவிலில் பாடப் பெற்றது?

தில்லைக்கோவில்

59) மாணிக்கவாசகர் எந்த ஊரை சேர்ந்தவர்?

திருவாதவூர்

60)மாணிக்கவாசகன் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் ?

அரிமர்த்தன பாண்டியன்

61) மாணிக்கவாசகர் இயற்றிய நூல்களின் பெயர் என்ன?

திருவாசகம்
⭐திருக்கோவையார்

62) காயில் என்பதன் பொருள் என்ன?

வெகுண்டால்

63)அந்தம் என்பதன் பொருள் என்ன ?

முடிவு

64)அயன் என்பதன் பொருள் என்ன ?
பிரமன்

65)மால் என்பதன் பொருள் என்ன?

விஷ்ணு

66)ஆலாலம் என்பதன் பொருள் என்ன?

நஞ்சு

67)இளையராஜா தமிழ் நாட்டின் எந்த ஊரை சேர்ந்தவர்?

தேனி மாவட்டம் பண்ணைப்புரம்

68) இளையராஜா அவருடைய இயற்பெயர் என்ன ?

இராசையா

69)சிம்பொனி இசை கோலத்தை எந்த குழுவிற்கு அமைத்துக் காட்டினார் இளையராஜா?

ராயல் ஃபில்ஹார்மானிக் இசைக்குழு .

70)இளையராஜா எந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்?

அன்னக்கிளி.

71)இளையராஜா பெற்ற விருதுகளின் பெயர்கள் என்னென்ன ?

இந்திய அரசு- பத்ம விபூஷண் விருது

⭐சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

⭐ சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது

தமிழ்நாடு -கலைமாமணி விருது

⭐மத்திய பிரதேசம்- லதா மங்கேஷ்கர் விருது

⭐கேரளம் -நிஷாகந்தி சங்கீத விருது

72)இளையராஜா வெளியிட்ட இசை தொகுப்புகளின் பெயர் என்னென்ன?

எப்படி பெயரிடுவேன்

⭐ காற்றைத் தவிர ஏதும் இல்லை

73) காற்றைத் தவிர ஏதும் இல்லை என்னும் இசைத் தொகுப்பு யாருடன் இணைந்து வெளியிடப்பட்டது?

புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராசியா .

74)மகிழ்ச்சி ,ஏக்கம் ,நம்பிக்கை உற்சாகம் ,வலி போன்ற மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை எந்த ஆவண குறும்படத்தின் பின்னணி இசையில் இளையராஜா வெளிப்படுத்தினார்?

இந்தியா 24 மணி நேரம்

75)மாணிக்கவாசகர் எழுதிய திருவாசக பாடல்களுக்கு இளையராஜா எந்த இசை வடிவில் இசை அமைத்துள்ளார் ?

ஆரட்டோரியா .

76)இளையராஜா வெளியிட்ட தமிழிசை தொகுப்புகளின் பெயர்கள் என்னென்ன?

ராஜாவின் ரமண மாலை

⭐இளையராஜாவின் கீதாஞ்சலி

77) இளையராஜா கன்னட மொழியில் எந்த பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்?

மூகாம்பிகை

78) ஆதிசங்கரர் எழுதிய எந்த பக்தி பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்?

மீனாட்சி ஸ்தோத்திரம்

79). இளைய ராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகத்தின் பெயரைக் குறிப்பிடு?

பஞ்ச முகி

80) இளையராஜா அரை நாளில் பிண்ணனி இசை அமைத்த திரைப்படம் எது?

100வது நாள்

81). இளையராஜா எழுதிய நூல்களின் பெயர் என்ன?

பால் நிலாப்பாதை

⭐வெட்ட வெளிதனில் கொட்டிக்கிடக்குது

82)பரிபாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பண்களின் பெயர்கள் என்னென்ன?

நோதிறம்
⭐பாலை யாழ்
⭐காந்தாரம்

83)சைவத் திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் பயன்படுத்திய பண்களின் பெயர்களில் குறிப்பிடப்படுக ?

நட்டபாடை
⭐இந்தளம்

84)தேவாரத்தில் எத்தனை
பண்களில் பாடல்கள் உள்ளன?

⭐23

85)தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்களின் பெயர்களைக் குறிப்பிடுக ?

நைவளம்
⭐அந்தாளி
⭐தோடி
⭐கல்வாணம்
⭐பியந்தை
⭐குறண்டி
⭐முதிர்ந்த இந்தளம்

86)ஒன்பதாம் திருமறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?

⭐ சாளர பாணி

87)மகாத்மா காந்தி எழுதிய இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்?

⭐நம்ரதா கே சாகர்

88)  நம்ரதா கே சாகர் என்னும் பாடலை பாடியவர் யார்?

ஹிந்துஸ்தானி இசை கலைஞர்  அஜொய்சக்கரபர்த்தி

89) ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?

⭐இளையராஜா.

90)சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதும், சிறந்த திரை இசைப் பாடலுக்கான ஆஸ்கர் விருதும் எந்த ஆண்டில் பெற்றார் ?

2009

91)ஏ ஆர் ரஹ்மானின் தந்தை யார் ?

ஆர் கே சேகர்

92)ஏ ஆர் ரகுமான் எந்த ஆண்டில் ரோஜா என்னும் திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக தன்னுடைய வாழ்வைத் தொடங்கினார்?

⭐ 1992

93)பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன?

103 பண்கள்

94)பண்கள் பாடும் காலங்களுக்கு ஏற்ற வாறு எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளன?

பகல் பண்
⭐இரவு பண் 
⭐பொது பண்

95) A.R.ரகுமான் பெற்ற விருதுகளின் பெயர்கள் என்னென்ன?

இந்திய அரசு- பத்ம பூஷன் விருது

⭐தமிழ்நாடு- கலைமாமணி விருது

⭐கேரளம்- தங்கப்பதக்கம்

⭐உத்திரப்பிரதேசம்- ஆவாத் சம்மான் விருது

⭐மத்திய பிரதேசம்- லதா மங்கேஷ்கர் விருது

- ⭐மொரீசியஸ் தேசிய இசை விருது

⭐மலேசியா -தேசிய இசை விருது

⭐ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - சர்வ தேச இசை விருது

96)திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?

⭐A.R.ரஹமான்

97)A.R.ரகுமான் எந்த திரைப்படத்தில் இசைக்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்?
⭐ஸ்லம்டாக் மில்லியனர்

98) இசைக்கான கிராமி விருதை எந்த படத்திற்காக பெற்றார்?

ஸ்லம்டாக் மில்லியனர்

99)20க்கும் மேற்பட்ட துறைகளுக்கு கலைச்சொற்களை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

100)தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை எனும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி எந்த ஆங்கில சொல்லுக்கு தமிழ் சொல் ஒன்றை உருவாக்க முனைந்தார்?

Member

101)சிவானந்த நடனம் என்ற நூலை எழுதியவர் யார் ?

ஆனந்த குமாரசுவாமி

102) தஞ்சை பெருவுடையார் கோவில் -ராச ராசேச்சுரம் - கோவில் நுட்பம் என்ற நூலை எழுதியவர் யார்?

குடவாயில் பாலசுப்ரமணியன்

103)தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க

எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?

⭐கம்பர்

104)சங்கரதாசு சுவாமிகளின் காலம் என்ன?

1867 -1922

105)சங்கரதாசு சுவாமிகள் யாரிடம் தமிழ் அறிவைப் பெற்றார?

புலவரேறு பழனி தண்டபாணி

106)சங்கரதாசு சுவாமிகள் எத்தனையாவது வயதிலேயே கவி ஆற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசை பாடல்களை இயற்றத் தொடங்கினார்?

⭐16

107)இரணியன், இராவணன், எமதர்மன் ஆகிய வேடங்களில் சங்கரதாச சுவாமிகள் நடித்து புகழ் அடைந்த போது அவருடைய வயது என்ன?

⭐24

108)சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழுவின் பெயர் என்ன ?

சமரச சன்மார்க்க சபை

109)சமரச சன்மார்க்க சபையில் பயிற்சி பெற்று நாடக கலை துறையில் பெரும் புகழ் பெற்றவர் யார்?

⭐எஸ்.ஜி. கிட்டப்பா

110)சங்கரதாசு சுவாமிகள் மதுரையில் 1918ல் உருவாக்கிய நாடக அமைப்பின் பெயர் என்ன?

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

111)தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் பயிற்சி பெற்றவர்கள் யார்?

டிகேஎஸ் சகோதரர்கள்

112)தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

சங்கரதாசு சுவாமிகள்






No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.