அயோத்திதாசப் பண்டிதர்

⭐அயோத்திதாச பண்டிதருடைய இயற்பெயர் காத்தவராயன்.

⭐சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மக்கிமா நகரில் பிறந்தவர்.

1845ஆம் ஆண்டு மே திங்கள் கந்தசாமி இணையருக்கு பிறந்தார் .

தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

வீ அயோத்திதாச பண்டிதர் என்பவரிடம் காத்தவராயன் கல்வி கற்றார்.பின்னர் குருவின் மேல் கொண்ட பாசத்தால் தன்னுடைய பெயரையும் அயோத்திதாச பண்டிதர் என மாற்றிக் கொண்டார்.

⭐நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இன பிரிவில் கலப்புத் திருமணம் செய்துகொண்டார் .

10 ஆண்டுகள் ரங்கூன் சென்று வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் தேயிலை பறிப்போர் ,விவசாயக் கூலி வேலை செய்வோர், மரம் அறுப்போர் இவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.

⭐புத்த நெறியால் கவரப்பட்டு தனக்குப் பிறந்த மகன்களுக்கு பட்டாபிராமன் ,மாதவராம், ஜானகிராமன், ராசாராம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். தன்னுடைய மகளுக்கு அம்பிகாதேவி, மாயாதேவி என்றும் பெயரினைச் சூட்டி மகிழ்ந்தார்.

சித்த மருத்துவத்தில் கைதேர்ந்ததால் மருத்துவர் எனவும் பண்டிதர் அழைக்கப்பட்டார்.

⭐பிரம்மஞான சபை ஆல்காட் தொடர்பால் சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் என இலவசப் பள்ளிகளை தலித்துகளுக்கு  நிறுவினார்.

காலணா விலையில் ஒரு பைசா தமிழன் என்ற இதழை வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் 4 பக்கங்களுடன் வெளிவந்தது. 19- 6 -1907 முதல் வெளிவந்தது..

⭐எள் செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த நாளே தீபாவளி என்று விளக்கம் தந்தார்.

ஜப்பான் நாட்டில் நுகர்பொருள் கண்டுபிடிப்பு நாளாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று ஆதாரம் கூறினார் .

புத்தரது ஆதிவேதம் எனும் நூலை 28 காதைகள் கொண்ட  பெரிய நூலாக எழுதினார்.

பெரும் குறவஞ்சி
⭐வீரசோழியம்
⭐நன்னூல் விளக்கம்
⭐ நாயனார்  திரிகுறள்
⭐சித்தர் பாடல்கள்
⭐வைராக்கிய சதகம்
⭐மச்சமுனிவர் ஞானம் ஆகிய நூல்களை துணை நூல்களாக கொண்டு ஆதிவேதம் எழுதினார்.

⭐ஆதி வேதத்தை பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் துணை கொண்டு எழுதினார்.

இந்திர தேச சரித்திரம் என்னும் நூலையும் எழுதினார்.

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.

⭐எழுத்து சீர்திருத்தம் செய்துள்ளார்.

திருவாசகத்துக்கு உரை எழுதியுள்ளார்.

⭐ இறப்பு :1914 May 5.


1 comment:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.