6th std tamil-50 Q&A

1)மூதுரை என்னும் நூலில் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
⚡31


2)ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
என்ற பாடலை எழுதியவர் யார்?

⚡பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

3)நடுவண் அரசு பெருந்தலைவர் காமராஜருக்கு எந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்கியது?

⚡1976

4)கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?

⚡அக்டோபர் 2 ,2000

5)காமராஜரை கல்விக் கண் திறந்தவர் என்று மனதார பாராட்டியவர் யார் ?
⚡தந்தை பெரியார்

6)ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
⚡அண்ணா நூற்றாண்டு நூலகம்

7)ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

⚡சீனா

8)இந்திய நூலக அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?
⚡இரா அரங்கநாதன்

9)சிறந்த நூலகர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

⚡டாக்டர்  எஸ் ஆர் அரங்கநாதன் விருது

10)அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளன ?
⚡எட்டு தளங்கள்

11)தமிழ் எழுத்துகளில் எதற்கு மட்டும் இன எழுத்து இல்லை?

⚡ஆயுத எழுத்து


12)நட்டல் என்பதன் பொருள் என்ன ?
⚡நட்புக் கொள்ளுதல்

13)ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?
⚡பெருவாயின் முள்ளியார்

14)பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது ?
⚡கயத்தூர்

15)ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
⚡நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு


16)ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
⚡100

17)முத்தேன் என்ற தொகைச்சொல்லின் விளக்கம் என்ன?

⚡கொம்புத்தேன்,பொந்துத்தேன்,கொசுத்தேன்


18)ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா ,உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡மகா சங்கராந்தி


19) பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡லோரி


20)குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
⚡உத்தராயன்

21)பஞ்சபாண்டவர் ரதங்கள் யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
⚡நரசிம்மவர்மன்

22)நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டை சேர்ந்த மன்னன்? ⚡ஏழாம் நூற்றாண்டு

23)சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?
⚡நான்கு

24)திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பாராட்டப் பெற்றவர் யார்? ⚡முடியரசன்

25)நெய்தல் திணையின் பூ எது? ⚡தாழம்பூ

26)விடிவெள்ளி நம்விளக்கு- ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம்- ஐலசா எனத் தொடங்கும் நாட்டுப்புறப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

⚡சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு

27)பொருள்களை வண்டியில் ஏற்றி வெளியூருக்கு  செல்லும் வணிகக் குழுவை எவ்வாறு அழைப்பர்?
⚡வணிகச்சாத்து

28)தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சுற்றி
............
உமணர் போகலும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡நற்றிணை

29)பாலொடு வந்து கூழொடு பெயரும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

⚡குறுந்தொகை

30)பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⚡அகநானூறு

31)சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
⚡ கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு

32)நடுநின்ற நன்னெஞ்சினோர் என்று  வணிகர்களை பாராட்டும் நூல் எது?
⚡பட்டினப்பாலை

33)கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது
என்று குறிப்பிடும் நூல் எது?

⚡பட்டினப்பாலை

34)பாடுபட்டுத் தேடியப் பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?

⚡ அவ்வையார்

35)அண்மை சுட்டெழுத்து எது?
⚡இ

36)சேய்மை சுட்டெழுத்து எது?
⚡அ

37)நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் யார்? ⚡முடியரசன்

38)தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
⚡ராதாகிருஷ்ணன்

39)தாரா பாரதிக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் என்ன?
⚡கவிஞாயிறு

40)தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடும் நூல் எது ?
⚡திருக்குறள்

41)காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடமாக தாராபாரதி குறிப்பிடுவது?
⚡காவிரிக்கரை

42)பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
⚡தாராபாரதி

43)காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
⚡மதுரை

44)காந்தியடிகள் எந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என விரும்பினார்?
⚡ உ.வே.சா

45)பாரதியாரை தமிழ்நாட்டின் சொத்து எனக் குறிப்பிட்டவர் யார்? ⚡ராஜாஜி

46)தமிழ் கையேடு என்பது யார் எழுதிய நூல் ?
⚡ஜி யு போப்

47)எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணமடைந்தார்? ⚡காளையார்கோவில்

48)வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
⚡தாண்டவராயன்

49)வேலு நாச்சியார் காளையார் கோவில் மீட்க சென்ற போது பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
⚡குயிலி

50))வேலு நாச்சியார் காளையார் கோவில் மீட்க சென்ற போது ஆண்கள் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
⚡மருது சகோதரர்கள்

4 comments:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.