பாரதியார்

⭐பாரதியாரின் இயற்பெயர்: சுப்பிரமணியம் .

⭐பெற்றோர் :சின்னசாமி ஐயர் லட்சுமி அம்மாள் .

⭐பாரதியார் பிறந்த ஊர்: எட்டயபுரம்.

11 -12 -1882 இல் முதல் 11.9.1921 வரை 39 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

⭐புதுக்கவிதைக்கு முன்னோடி.

⭐தம் பாடல்களுக்கு தானே மெட்டு அமைத்த கவிஞர்.

⭐ கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் .

⭐அறிவில் சிறந்த இல்லறத்தாருக்கு கொடுக்கப்படும் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் .

⭐எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்.

⭐பாரதியாரின் புனைபெயர்கள் ⭐காளிதாசன்
⭐சக்திதாசன்
⭐சாவித்திரி
⭐ஓர் உத்தம தேசாபிமானி
⭐நித்திய தீரர்
⭐ஷெல்லி தாசன்

இந்தியா என்ற இதழின் ஆசிரியராகவும் ,சுதேசமித்திரன் என்ற இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்

கர்மயோகி, பாலபாரதி என்ற ஆங்கில இதழையும் நடத்தியவர்.


1905ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கினார்.

⭐தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடருக்கு அளித்த பெருமை உடையவர்.

தம்பி என பாரதியாரால் அழைக்கப்பட்டவர் பரலி நெல்லையப்பர்.

⭐பாரதியின் முக்கியமான நண்பர்கள்
பரலி நெல்லையப்பர்  ⭐பாரதிதாசன்
⭐வ .ரா

⭐பாரதி தோற்றுவித்த அமைப்பின் பெயர் சென்னை ஜனசங்கம்.

⭐பாரதியாரின் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்.

⭐பாரதியின் பாடல்களை ஏவி மெய்யப்பன் செட்டியாரிடம் இருந்து வாங்கி நாட்டுடைமை ஆக்கியது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.

⭐பாரதிக்கு மகாகவி என்ற பட்டம் கொடுத்தவர் வ .ரா

⭐பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி அய்யர்.

⭐தற்போது காணப்படும் பாரதியின் படத்தை வரைந்தவர்
ஆரிய என்ற பாஷ்யம்.

⭐பத்திரிகைகளில் கருத்துப்படம் முதன்முதலில் வெளியிட்டவர் பாரதி.

⭐பாரதியாரின் இளமைக்கால தோழர் சோமசுந்தர பாரதியார்.

⭐பெண்களுக்காக பாரதியார் நடத்திய பத்திரிகை சக்கரவர்த்தினி.

⭐பாட்டுக் கொருபுலவன் பாரதியடா என்று கவிமணி பாரதியாரை பாராட்டினார்.

⭐பாரதியார் ஓர் அவதாரப் புருஷர். இவர் நூலை தமிழர் வேதமாக கொள்வார்களா என்று புகழ்ந்தவர் பரலி.சு. நெல்லையப்பர்.

⭐பாரதியை நினைத்தாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும். இந்தியன் நான் என்றிடும் நல்இறுமாப்பு உண்டாகும் என்று கூறியவர் நாமக்கல் கவிஞர்.

⭐பைந்தமிழ் தேர்ப்பாகன் செந்தமிழ்த் தேனீ
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக்குயில் இந்நாட்டினை கவிழ்க்கும் பகையைக்
கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன்
புதிய அறம்பாட வந்த அறிஞன் என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்

என்று கூறியவர்  பாரதிதாசன்.

வால்ட் விட்மன் ,கலில் ஹிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிட தகுந்தவர் பாரதியார்.

⭐தமிழ் மகள் என்று பாரதியார் அவ்வையாரை குறிப்பிடுகிறார்.

ஞானரதம் ,சந்திரிகையின் கதை தராசு முதலிய உரைநடை நூல்களையும் பாரதியார் எழுதியுள்ளார்.

⭐மேற்கோள்

⭐"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"

⭐"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"

⭐"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இச் சகத்தினை அழித்திடுவோம்"

⭐"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா"

⭐"காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

⭐ "பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்"

⭐ "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு"

⭐ "வாழிய பாரத மணித் திருநாடு"

⭐"ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்"

⭐"கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்"

⭐"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும் "

⭐"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே"

⭐"உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்"

⭐"மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்"

⭐"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"

⭐"நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர் ;கீழவர் மற்றோர்"

⭐"சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்"

⭐"நினைவு நல்லது வேண்டும்"

⭐ "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்"

⭐"தையலை போற்று"


No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.