11th std tamil-இயல்-8-Q A

1)காற்றில் கலந்த பேரோசை என்னும் கட்டுரையில் சுந்தர ராமசாமி யாரைப் பற்றி குறிப்பிடுகிறார்?

ஜீவா

2)சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர் ?
நாகர்கோவில்

3) சுந்தர ராமசாமி எந்த புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் ?

பசுவய்யா

4)சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் பெயர்கள் என்னென்ன?
ரத்னாபாயின் ஆங்கிலம்  ⭐காகங்கள்

5) சுந்தர ராமசாமி எழுதிய  புதினங்களின் பெயர்கள் என்னென்ன?
ஒரு புளிய மரத்தின் கதை
⭐ஜே ஜே சில குறிப்புகள் ⭐குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.

6) சுந்தர ராமசாமி மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த புதினங்கள் யாவை ?

செம்மீன் ,
⭐தோட்டியின் மகன்

7)காற்றில் கலந்த பேரோசை என்னும் சுந்தர ராமசாமியின் கட்டுரை எந்த இதழில் வெளியானது?

தாமரை (1963இல்)

8)கனிகள் என்பதன் பொருள் என்ன?
உலோகங்கள்

9) மீட்சி என்பதன் பொருள் என்ன?

விடுதலை

10) நவை என்பதன் பொருள் என்ன?

குற்றம்.

11)படி என்பதன் பொருள் என்ன?

உலகம்

12)உலகக் கவிதைகள் தொகுப்பு யாருடையது ?

பிரம்மராஜன்

13)வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் எனும் காவியத்தை தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்டது ?

புரட்சிக்கவி

14) புரட்சிக்கவி எந்த ஆண்டு எழுதப்பட்டது ?

1937இல்

15) குயில் என்ற இலக்கிய இதழை நடத்தியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

16) பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

17) வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே எனும் இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தமிழ்த் தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது?

புதுவை அரசு

18) தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக்கழகம் நிறுவி உள்ளது?

திருச்சி.

19)பதி என்பதன் பொருள் என்ன?

நாடு

20)நிரையம் என்பதன் பொருள் என்ன ?

நரகம் 

21)புரையோர் என்பதன் பொருள் என்ன ?

சான்றோர்

22) யாணர் என்பதன் பொருள் என்ன?

புதுவருவாய்

23) மருண்டெனன் என்பதன் பொருள் என்ன?

வியப்பு அடைந்தேன்

24) தண்டா என்பதன் பொருள் என்ன ?

⭐ஓயாத

25) கடுந்துப்பு என்பதன் பொருள் என்ன ?

மிகு வலிமை

26) ஒடியா என்பதன் பொருள் என்ன?

குறையா

27)உதியன் சேரலாதன் , வேண் மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் யார்?

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

28)சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் எந்த நூலில் பாடலை எழுதியுள்ளார்?

பதிற்றுப்பத்து ( 2 ம் பத்து)

29)சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் பதிற்றுப்பத்து நூல் எந்த திணையில்  அமைந்துள்ளது?

பாடாண் திணை

30) பாடாண் திணையின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்

31) உம்பற்காட்டில் ஐநூறு ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றவர் யார்?

குமட்டூர் கண்ணனார்

32)வீட்டுக்கு உயிர்வேலி!

  வீதிக்கு விளக்குத்தூண் !

நாட்டுக்கு கோட்டை மதில்!

நடமாடும் கொடிமரம் நீ

என்று இளைஞர்களைப் பற்றி பாடியவர் யார்?

கவிஞர் தாரா பாரதி

33)"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்று பாடியவர் யார்?

பாரதி

34)"தமிழா பயப்படாதே.
வீடு தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்

என்று கட்டளையிட்டவர் யார்?

பாரதியார்

35)தேடு கல்வி இலாததோர்  ஊரைத்
தீயி னுக் கிரையாக மடுத்தல்

என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையை சினத்துடன் கூறியவர் யார்?

பாரதியார்

36)பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்

என்று கூறியவர் யார் ?

பாரதி

37)பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில்

மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே

என்று கூறியவர் யார்?

பாரதிதாசன்

38)வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் என்று கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

39)விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

மானிட சமுத்திரம் நானென்று கூவு

புவியை நடத்து; பொதுவில் நடத்து !

என்று உலகத்தையே வீடாகக் காட்டியவர் யார்?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

40)"பட்டி மண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?

மணிமேகலை

41)ஜீவா வாழ்க்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?

⭐கே. பாலதண்டாயுதம்

42) சொல்லாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

⭐இ .மறைமலை

43)ஹைக்கூ என்பதற்கு தமிழில் என்ன பெயர் ?

துளிப்பா

44) பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டு சொன்னது பூமி 'ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ '

என்ற கவிதை எழுதியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

45) எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி

என்ற கவிதையை எழுதியவர்
யார் ?

கழனியூரன்

46)சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்

சுகம் தரும் உணர்ச்சியும் வேறு உண்டோ? 

என்ற கவிதையை எழுதியவர் யார்?

நாமக்கல் கவிஞர்

47)மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் வாழ்ந்த காலம் என்ன ?

1900- 1980

48)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய கட்டுரைகளின் பெயர் என்ன?
ராமேசுவரத் தீவு
⭐உறையூர் அழிந்த வரலாறு
⭐ மறைந்து போன மருங்காப் பட்டினம்

49)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய வரலாற்று நூல்களின் பெயர் என்னென்ன?

கொங்கு நாட்டு வரலாறு
⭐ துளுவ நாட்டு வரலாறு
⭐சேரன் செங்குட்டுவன் ⭐மகேந்திரவர்மன்
⭐நரசிம்மவர்மன்
⭐மூன்றாம் நந்திவர்மன்

50)இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டிய நூல் எது ?

களப்பிரர் கால தமிழகம்

51).மயிலை சினி வேங்கடசாமி அவர்களுக்கு தெரிந்த மொழிகள் என்ன?

ஆங்கிலம்
⭐மலையாளம்
கன்னடம்

52)மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்களின் பெயர்களை எழுதுக.

கிறிஸ்துவமும் தமிழும்
⭐சமணமும் தமிழும்
⭐ பௌத்தமும் தமிழும்
⭐ மறைந்து போன தமிழ் நூல்கள்

53)மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக் கழகம் 1980 ஆம் ஆண்டு எந்த பட்டமளித்துப் பாராட்டியது?

தமிழ்ப் பேரவைச் செம்மல்

54)பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளை சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

ஆக்கப் பெயர்கள்

55) ஆக்க பெயர்கள் என்னென்ன?
காரன்
⭐காரர்
⭐ காரி
⭐ஆள்
⭐ஆளர்
⭐ஆளி
⭐தாரர்
⭐மானம்

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.