11th std tamil new book- இயல்-9-Q A

1)சித்தர்களை குறிப்பிடும் நிறைமொழி மாந்தர் என்னும் சொல் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?

தொல்காப்பியம், திருக்குறள்




2)சித்தன் என்னும் சொல் சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் இடம்பெற்றுள்ளது?

நாடுகாண் காதை


3)சித்தர்கள் என்றால் என்ன பொருள்?

நிறைவடைந்தவர்

4)தமிழில் சித்து என்னும் சொல்லுக்கு உள்ள பொருள்கள் என்னென்ன?

மனம் ,கருத்து ,ஆன்மா

5)தமிழ்ப் பேரகராதியின் படி சித்தி என்னும் சொல்லிற்கு உள்ள பொருள்கள் என்னென்ன?

மெய்யறிதல் ,வெற்றி ,காரியம் கைகூடல்


6)சித்தர்களின் ஆதிசித்தர் என்று கருதப்படுபவர் யார் ?

திருமூலர்


7)திருமூலரின் காலம் எந்த நூற்றாண்டு?

கிபி ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டு



8)சித்தர்களின் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார் ?அவரின் காலம் என்ன?

சிவவாக்கியர் (ஒன்பதாம் நூற்றாண்டு)


9)எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
என்று கூறியவர் யார் ?

பாரதியார்

10)ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது யாருடைய கடவுள் கொள்கை?

திருமூலர்


11) ஒன்றென்றிரு ,தெய்வம் உண்டென்றிரு என்று கூறியவர் யார்?
பட்டினத்தார்.

12)ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்று கூறுவது எந்த நூல் ?

திருமந்திரம்


13) தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது யாருடைய வாக்கு?

⚡திருமூலர்.





14)நாடொணாத அமிர்த முண்டு நான் அழிந்த நின்ற நாள் என்று கூறியவர் யார்?

சிவவாக்கியர்





15)சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறியவர் யார் ?

அறிஞர் க. கைலாசபதி

16)சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ என்று கூறியவர் யார் ?

சிவவாக்கியர்


17)சாதிப் பிரிவினிலே தீயை மூட்டு வோம் என்று கூறியவர் யார் ?

பாம்பாட்டி சித்தர்

18)ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்

என்று கூறியவர் யார்?

பத்திரகிரியார்

20)உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம் (திருமூலர்)




21)நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தான் ஒரு தோண்டி-

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

என்ற பாடல் எழுதியவர் யார்?

கடுவெளி சித்தர்






22)குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் குறிப்பிட சித்தர்கள் பயன்படுத்தும் சொல் எது?

மாங்காய்ப்பால்





23)தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே!- ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!
நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே!- அங்கே
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
என்ற பாடலை எழுதியவர் யார்?

வள்ளலார்






24)விழுந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
அடடா .......வண்ணத்துப்பூச்சி என்ற ஹைக்கூவை எழுதியவர் யார் ?

மோரிடாகே




25)பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் இலையுதிர் கால மாலை

என்ற ஹைக்கூவை எழுதியவர் யார்?

பாஷோ




26)பெட்டிக்கு வந்தபின்
எல்லா காய்களும் சமம்தான் சதுரங்கக்காய்கள்

என்ற ஹைக்கூ எழுதியவர் யார்?

இஸ்ஸா





27)சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது

என்பது யார் எழுதிய கவிதை ?

பிரமிள்




28)பிரமிள் என்ற பெயரில் எழுதியவருடைய இயற்பெயர் என்ன?

சிவராமலிங்கம்


29)சிவராமலிங்கம் எங்கு பிறந்தவர் ?

இலங்கை



30)சிவராமலிங்கம் வேறு எந்த புனைப் பெயர்களில் எழுதி உள்ளார் ?

பானுச்சந்திரன்
⚡அரூப் சிவராம்
⚡தருமு சிவராம்





31)சிவராமலிங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பின் பெயர் என்ன ?
லங்காபுரி ராஜா



32)சிவராமலிங்கம் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?

நட்சத்திரவாசி



33) சிவராமலிங்கம் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?

வெயிலும் நிழலும்





34) தொலைந்து போனவர்கள் என்ற கவிதையை எழுதியவர் யார் ?

அப்துல் ரகுமான்




35)தொலைந்து போனவர்கள் என்ற கவிதை எந்தப் பா வகையில் அமைந்துள்ளது ?

சிந்து


36)தொலைந்து போனவர்கள்  என்ற கவிதை எந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

சுட்டுவிரல்


37)அப்துல் ரகுமான் எந்தக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் ?

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி




38)அப்துல் ரகுமான் எழுதிய நூல்களின் பெயர் என்னென்ன?

பால்வீதி
⚡நேயர் விருப்பம்
⚡பித்தன்
⚡ஆலாபனை







39)அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் என்னென்ன?

பாரதிதாசன் விருது

⚡தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது

⚡ஆலாபனை எனும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது







40)மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தின் ஆசிரியர் யார்?

மௌலானா ரூமி (பிறப்பு-1207)

41) மெளலானா ரூமி எங்கு பிறந்தவர் ?

ஆஃப்கானிஸ்தான் .

42)எத்தனையாவது நாளில் கண்ணனின் தந்திரத்தால் அர்ஜுனனின் தேர் சக்கரத்தில் கன்னன் சாய்கிறான் என்று வில்லிபாரதத்தில் குறிப்பிடப்படுகிறது ?

17 ஆவது நாள் போர்



43)ஹோமரின் இலியட் ஒடிசி போன்ற இதிகாசங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?

கிரேக்க மொழி


44)வில்லிபாரதத்தை எழுதியவர் யார் ?

வில்லிபுத்தூரார்

45)வில்லிபுத்தூரார் யாரால் ஆதரிக்கப்பட்டார் ?

வக்கபாகை மன்னன் வரபதி ஆட்கொண்டான்

46)வில்லிபாரதம் எத்தனை பருவங்களைக் கொண்டது?

பத்து பருவங்கள்


47) வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?

   ⚡4351


48)வில்லி பாரதத்தின் முதல் பருவம் என்ன?

ஆதி பருவம்

49) வில்லி பாரதத்தின் பத்தாம் பருவம் என்ன?

சௌப்திக பருவம்



50)புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

சொ . விருத்தாசலம்


51)காஞ்சனை என்னும் சிறுகதைத் தொகுப்பு யார் எழுதியது ?

புதுமைப்பித்தன்


52)சிறுகதை மன்னர் என்று போற்றப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்

53)மரணத்தின் பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றியவர் யார் ?

மறைமலை அடிகள்


54)பல்வேறு வகையான நிறுத்தக் குறிகளை அறிமுகப்படுத்தி எந்தெந்த இடங்களில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என விளக்கியவர்கள் யார்?

ஐரோப்பியர்கள்

55)செவ்வாழை என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

பேரறிஞர் அண்ணா


56)அளி என்பதன் பல பொருள்கள் என்னென்ன?

அன்பு
⚡அருள்
⚡ குளிர்ச்சி
⚡வண்டு
⚡இரக்கம்
⚡எளிமை

57)வில்லிபாரதத்தில் சூரியனின் தோன்றல் என்று குறிப்பிடபடுபவர் யார்?

கர்ணன்


58)வள்ளலார் எழுதிய நூல்கள் என்னென்ன?

தெய்வமணிமாலை
⚡கந்தர் சரணப்பத்து
⚡மனுமுறை கண்ட வாசகம்


59)வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை ?
தொண்டை மண்டல சதகம் ⚡சின்மய தீபிகை
⚡ஒழிவில் ஒடுக்கம்


60)⚡கடவுள் ஒருவரே.

⚡அவரை சோதி வடிவில் உண்மை அன்பால் வழிபடவேண்டும்.

⚡சிறு தெய்வ வழிபாடு கூடாது.

⚡தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது.

⚡புலால் உண்ணலாகாது.

⚡ சாதி சமய வேறுபாடுகள் கூடா.

⚡எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வை கடைப்பிடிக்க வேண்டும்.

⚡எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

⚡புராணங்களும் சாஸ்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டா .
⚡மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்  .என்று கூறியவர் யார்?


வள்ளலார்


61)ஒன்றிலிருந் தொன்றென்னும்  உலக நிலை அறிந்தேன் உணவுகளின் பிண்டம் தான் உடல் என்பதை அறிந்தேன்

என்னும் பாடலை எழுதியவர் யார்?

சுரதா

62)என் வாழ்க்கை என் கையில் என்னும் நூலை எழுதியவர் யார்?

ஞானி


63) மனித வாழ்வை மாற்றி அமைத்த கண்டுபிடிப்பாளர்கள் - என்ற நூலை எழுதியவர் யார்?

ஆர் .கே .வி கோபாலகிருஷ்ணன்

⚡மொழிபெயர்த்தவர்( அய்யாசாமி)

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.