பெரியார்

⭐தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்

என்ற வரிகள் பெரியாரைப் பற்றிப் பாவேந்தர் கூறியவை.

⭐ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று. மொழிப் பற்று இல்லாத இடத்தில் தேசப்பற்றும் இராது என்பது உறுதி. தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு  இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்கு தாய்மொழிப்பற்று பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை என்று கூறினார்.

⭐பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்
இரண்டு வகை
ஒன்று ⭐அடிப்படைத் தேவைகள்  பிரிதொன்று ⭐அகற்றப்பட வேண்டியவை .

பெண்கல்வி
⭐பெண்ணுரிமை
⭐சொத்துரிமை
⭐அரசு பணி ஆகிய அடிப்படைத் தேவைகள்.

குழந்தை திருமணம்
⭐கைம்மை வாழ்வு
⭐மணக் கொடை ஆகியன அகற்றப்பட வேண்டியவை.

⭐ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சிந்தித்தவர்.

⭐ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பும் உலகப் படிப்பும் தாராளமாய் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெரும் கேடு பெண்களை பகுத்தறிவற்ற ஜீவன்களாக வைத்திருக்கும் கொடுமை இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும், என்று கூறினார்.

⭐பெண்ணடிமை என்பதற்கான காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாததே முதன்மையான காரணம் என்று கூறினார்.

⭐பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்கு கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடி செயலாகும் என்று கூறினார்.

⭐அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் தலை கீழான புரட்சி ஏற்படும் என்று கூறினார்.

⭐தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இல்லாமல் பந்தைய குதிரைகளாக மாறவேண்டும். தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று பெரியார் கூறினார் .

⭐ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கைப் பயணமா? இது சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என குழந்தை மணத்தைப் பற்றி கூறியுள்ளார்.

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.