11th std tamil new book-தமிழ் -இயல் 10-கேள்வி-பதில்

G1)பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்டவர் யார் ?

தாகூர்

2)தாகூர் தன்னுடைய எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?

16


3)கீதாஞ்சலி என்ற கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு தாகூர் எந்த ஆண்டு பெற்றார்?

1913


4)ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்தி  ஆங்கில அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய எந்த பட்டத்தை துறந்தார்?


சர்

5) குருதேவ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
தாகூர்

6) குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும் .தங்கள் வேலையை தாங்களே கவனித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தாகூர் எந்த பல்கலைக்கழகத்தை நிறுவினார்?

விஸ்வபாரதி பல்கலைக்கழகம் (1921)


7)அமர் சோனார் பங்களா என்னும் வங்காளதேசத்தின் நாட்டுப்பண்ணை எழுதியவர் யார்?

தாகூர்


8)சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார் ?

த .நா. குமாரசாமி



9)த.நா. குமாரசாமி அவர்களுக்கு தெரிந்த மொழிகள் என்னென்ன?

தமிழ்
சமஸ்கிருதம்
தெலுங்கு
வங்கம்
பாலி
ஆங்கிலம்


10)வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு குமாரசாமி ஆற்றிய தொண்டைப் பாராட்டி எந்த விருதை அளித்தது ?

நேதாஜி இலக்கிய விருது


11)ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

என்னும் கவிதையை எழுதியவர் யார்? 

இன்குலாப்


12)இன்குலாபின் இயற்பெயர் என்ன ?

சாகுல் அமீது


13) இன்குலாப் கவிதைகள் எந்த பெயரில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன?

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்


14) இன்குலாபின் மரணத்திற்குப் பிறகு அவருடைய உடல் அவர் விரும்பியபடி எந்த மருத்துவ கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது?

செங்கை அரசு மருத்துவக் கல்லூரி


15)தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது ?

மனோன்மணீயம்


16) மனோன்மணீயம் என்ற நூல் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது ?

லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி


17) பேராசிரியர் சுந்தரனார் எந்த ஆண்டு தமிழில் எழுதினார் ?

1891

18) மனோன்மணியம் நூல் எந்த பாவினால் அமைந்தது?
⭐ஆசிரியப்பா



19)  மனோன் மணியம் நூல் எத்தனை அங்கங்களையும் எத்தனை களங்களையும் உள்ளடக்கியது?

⭐  5 அங்கங்கள் , 20 களங்கள்


20)மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை எது?

சிவகாமியின் சரிதம்


21) சுந்தரனார் எந்த ஆண்டு பிறந்தார் ? 

1855 


22)சுந்தரனார் எந்த கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்?

திருவனந்தபுரம் அரசு கல்லூரி


23) சென்னை மாகாண அரசு பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களுக்கு எந்த பட்டம் வழங்கி சிறப்பித்தது?

ராவ்பகதூர்


24)தமிழக அரசு எங்கு சுந்தரனாரை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது ?

திருநெல்வேலி


25)கடிநகர் என்பதன் பொருள் என்ன ?

காவல் உடைய நகரம்

26)காண்டி என்பதன் பொருள் என்ன ?

காண்க

27) பூம்பராகம் என்பதன் பொருள் என்ன?

பூவில் உள்ள மகரந்தம்


28) ஆசு இலா என்பதன் பொருள் என்ன ?

குற்றம் இல்லாத


29) தோட்டி என்பதன் பொருள் என்ன ?

துறட்டி


30)அயம் என்பதன் பொருள் என்ன ?
ஆடு ,குதிரை

31)புக்கவிட்டு என்பதன் பொருள் என்ன?

போக விட்டு

32)சீரிய தூளி என்பதன் பொருள் என்ன?

நுண்ணிய மணல்

33) சிறுகால் என்பதன் பொருள் என்ன ?
வாய்க்கால்

34) பரல் என்பதன் பொருள் என்ன ?

கல்

35) முந்நீர் மடு என்பதன் பொருள் என்ன?

கடலாகிய நீர்நிலை

36) அண்ட யோனி என்பதன் பொருள் என்ன ?
ஞாயிறு

37) சாடு என்பதன் பொருள் என்ன?
பாய்

38) ஈட்டியது என்பதன் பொருள் என்ன ?
சேகரித்தல்


39)எழிலி என்பதன் பொருள் என்ன ?
மேகம்


40)நாங்கூழ் புழு என்பதன் பொருள் என்ன?

மண்புழு

41)பாடு என்பதன் பொருள் என்ன?
உழைப்பு

42)ஓவா என்பதன் பொருள் என்ன ?
ஓயாத


43)வேதித்து என்பதன் பொருள் என்ன ?

மாற்றி

44)நர்த்தகி நடராஜ் என்னும் பரதநாட்டிய கலைஞர் எந்த ஊரை சேர்ந்தவர் ?

மதுரை (அனுப்பானடி)

45)நர்த்தகி நடராஜ் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?

வைஜெயந்திமாலா


46) நர்த்தகி நடராஜ் குரு யார்?

தஞ்சை கிட்டப்பா


47) நர்த்தகி நடராஜ் நர்த்தகி என்ற பெயரைச் சூட்டியவர் யார்?

கிட்டப்பா


48)நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள் என்னென்ன?

தமிழக அரசின் கலைமாமணி விருது

இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது

இந்திய அரசு தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்

பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்


49)தாமரை நெஞ்சம் என்னும் நூலை எழுதியவர் யார் ?

அகிலன்

50)நர்த்தகி நடராஜ் நடத்தும் அறக்கட்டளையின் பெயர் என்ன?

வெள்ளியம்பலம் அறக்கட்டளை

51)திருநங்கைகளின் முதன்முதலில் கடவுச்சீட்டு ,தேசிய விருது ,மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் யார் ?
நர்த்தகி நடராஜ்


52)இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார் ?

பிரித்திகா யாஷினி(சேலம் மாவட்டம்)

53)லோக் அதாலத் நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார் ?

ஜோயிதா மோண்டல் மாஹி (மேற்கு வங்கம்)

54)தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதல் நபர் யார்?

தாரிகா பானு

55)தாரிகா பானு எங்கு படித்தார்?

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் (காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி)

56)இளமை விருந்து என்ற நூலை எழுதியவர் யார் ?

திரு.வி.க

57)திரு.வி.க வெஸ்லி பள்ளியில் படித்தபோது யாரிடம் தமிழ் படித்தார்?
நா . கதிரைவேல்

58) தமிழோடு சைவ நூல்களையும் திரு.வி.க யாரிடம் பயின்றார்?
🌟மயிலை தணிகாசலம்

59)திரு வி க எழுதிய நூல்கள் என்னென்ன?
பெண்ணின் பெருமை
முருகன் அல்லது அழகு
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
என் கடன் பணி செய்து கிடப்பதே ⭐சைவத் திறவு
இந்தியாவும் விடுதலையும் ⭐பொதுமை வேட்டல்
திருக்குறள் விரிவுரை

60) திரு வி க எந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தார்?⭐ தேசபக்தன்
நவசக்தி

61)தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் யார்?
திரு.வி.க

62) திரு.வி.க எந்த கல்லூரியில் தலைமை தமிழ் ஆசிரியராக இருந்தார்?

சென்னை ராயப் பேட்டை வெஸ்லி கல்லூரி

63)சங்கத்தமிழ் அனைத்தும் தா என்ற கவிதையை எழுதியவர் யார் ?

ஹெச் ஜி ரசூல்

64)மனைவியின் கடிதம் - ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
த.நா. குமாரசாமி

65) நான் வித்யா என்ற நூலின் ஆசிரியர் யார் ?

லிவிங் ஸ்மைல் வித்யா

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.