அண்ணல் அம்பேத்கர்

⭐இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜி

⭐பிறந்த இடம்: மராட்டிய மாநிலம் கொங்கண் மாவட்டம்( அம்பவாடே)

⭐பிறந்த ஆண்டு : 1891 ஏப்ரல் 14

⭐ தந்தை : ராம்ஜி சக்பால்

⭐தாய் : பீமா பாய்

14வது பிள்ளையாகப் பிறந்தார்.

1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தார்.

1912 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1915 இல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

1916 இல் லண்டனில் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

⭐மும்பையில் பொருளாதார பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்

⭐பின் ,லண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார் .

⭐இந்தியா திரும்பியபின் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

1924ஆம் ஆண்டு கேரளாவில் வைக்கம் என்னும் இடத்தில் பெரியார் ஒடுக்கப் பட்டோர் ஆலயநுழைவு முயற்சியை மேற்கொண்டார்.

1927 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் இருபதாம் நாள் அம்பேத்கர் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்.

⭐விடுதலைக்குப் பின் அம்பேத்கர் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார்.

⭐ஒவ்வொருவரும் முழு மனித நிலையை அடைய கல்வி, செல்வம் ,உழைப்பு ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் .உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் என்று கூறினார்.

⭐கற்பித்தல் அறிவியல் முறைக்கு உகந்ததாகச் இருத்தல் வேண்டும்; விருப்பு வெறுப்பற்ற முறையில் கற்பித்தல் நிகழ்தல் வேண்டும்; மாணவனுக்குள் தகவல்களை திணிப்பதாக கல்வி இருத்தல் கூடாது ;அது அவனது ஊக்கத்தை தூண்டுவதுடன் தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருத்தல் வேண்டும் என்று கற்றல் கற்பித்தலின் குறிக்கோள்கள் பற்றி அண்ணல் அம்பேத்கர்  கூறியுள்ளார்.

1946 ஆம் ஆண்டு மக்கள் கல்வி கழகத்தைத் தோற்றுவித்தார்.

சித்தார்த்தா உயர் கல்வி நிலையத்தை மும்பையில் உருவாக்கினார்.

இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்ற பொருளாதர நூலை எழுதினார்.

⭐சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியது அன்று. சில குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும். சாதி களையப்பட வேண்டிய களை என்று அம்பேத்கர் கூறினார்.

⭐ஓர் இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறினார்.

⭐இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்கு சாதி என்பது நன்மை தராது .இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சாதி என்னும் நோய் தீங்கு விளைவிக்கின்றது. அது மக்களிடையே ஒருமைப்பாட்டை சீர்குலைத்துவிட்டது. இதை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால் போதும். அதுவே எனக்கு நிறைவு தரும் என்று அம்பேத்கர் கூறினார்.

⭐சனநாயகத்தின் மறுபெயர்தான் சகோதரத்துவம் .சுதந்திரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடமையையும் பாதுகாக்கும் உரிமை அது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமமாகும் என்று சனநாயகத்திற்கு விளக்கம் தந்தவர் அம்பேத்கர்.

⭐அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்; பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி .இப்பெரும் தலைவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது என்று அம்பேத்கரை புகழ்ந்தவர் பெரியார்.

⭐"பகுத்தறிவு துறையில் அவருக்கு இணை அவரே. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்" என்று அம்பேத்கரைப் புகழ்ந்தவர் நேரு.

⭐அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர். மிகவும் ஆர்வத்துடனும் வேகத்துடனும் தன்னந்தனியாக செயல்பட்டவர் .தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் எனப் பாராட்டியவர் இராசேந்திரப் பிரசாத்.

1990ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை அம்பேத்கர் பெற்றார்.

⭐இறப்பு : டிசம்பர் 6, 1956.

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.