9th std Tamil new book Q A


1.தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார் ?
                முத்துலட்சுமி


2.தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை யாருடைய பெயரில் வழங்கி வருகிறது?
         மூவலூர் ராமாமிர்தம்.


3.தமிழகத்திற்கு வந்து வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்? 
      ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்


4.பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டும் என போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?           12


5.கைலாஷ் சத்தியமூர்த்தி எந்த வருடம் நோபல் பரிசு வாங்கினார்?
                       2014


6.நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்? சாவித்திரிபாய் பூலே


7.முதன்முதலில் பெண்கல்வி பரிந்துரை செய்த குழு எது?
         ஹண்டர் குழு 1882


8.மராட்டிய மாநிலத்தில் யார் முதன்முதலாக பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்? ஜோதிராவ் பூலே &சாவித்திரிபாய் பூலே


9. ஈ.வெ.ரா நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது ?
பட்ட மேற்படிப்பு


10.சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது?
    கல்வி ,திருமண உதவித்தொகை


11.மறைமலையடிகளின் மகள் யார்? நீலாம்பிகை அம்மையார்.


12.தனது பரிந்துரையில் அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை வலியுறுத்திய கூறிய குழு எது?
கோத்தாரிக் கல்விக் குழு 1964


13.சாரதா சட்டம் கொண்டுவரப்பட்டது எப்போது ?1929


14.சாரதா சட்டம் எதனுடன் தொடர்புடையது?
        குழந்தை திருமணம்


15.சூரியன் ,பரமாணு புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளவர் யார்?
ராஜேஸ்வரி அம்மையார்


16.திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றி உள்ளவர் யார்? ராஜேஸ்வரி அம்மையார்.


16.ராஜேஸ்வரி அம்மையார் எந்த கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார் ?
      ராணி மேரி கல்லூரி.


17. குடும்ப விளக்கு எனும் நூல் எத்தனைப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது ?5


18.பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது என்றவர் யார்?
              பாவேந்தர்


19.10 வயதுக்கு உள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
                  வள்ளலார்


20 .11 ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?                பாரதியார்


21.பதினைந்தாவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்திற்கும் தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் யார்?
விக்டர் ஹியூகோ


22.பதினாறாவது வயதிலேயே தனது தந்தையின் போர் படையில் தளபதியானவர்யார்?
மாவீரன் அலெக்சாண்டர்


23. 17 வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தினன் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?
  கலிலியோ


24.நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை எந்த வருடம் வெளியிட்டது ?
                      2009


25.அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்தது நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்போது உருவாக்கியது?
                       2010

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.