11th std Tamil -இயல்-6-Part-2


1)ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு என்ன பொருள்?

 ⭐இடம் பெயர்தல்


2)மக்கா நகரத்தின் எந்த இன மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்ததாக ஹிஜரத்து காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது?

 ⭐குறைசி இன மக்கள்



3)வரை என்பதன் பொருள் என்ன?

 ⭐மலை

4)கம்பலை என்பதன் பொருள் என்ன?

 ⭐பேரொலி

5)புடவி என்பதன் பொருள் என்ன? ⭐உலகம்


6)வதுவை என்பதன் பொருள் என்ன?
 ⭐திருமணம்

7)கோன் என்பதன் பொருள் என்ன ⭐அரசன்

8)விண்டு என்பதன் பொருள் என்ன?

 ⭐திறந்து

9)தீன் என்பதன் பொருள் என்ன? ⭐மார்க்கம்

 10)காய்ந்த என்பதன் பொருள் என்ன ?
⭐சிறந்த


11)துன்ன என்பதன் பொருள் என்ன?

 ⭐நெருங்கிய

 12)தெண்டிரை என்பதன் பொருள் என்ன?

 ⭐தெள்ளிய நீர் அலை

13)சீறா என்பது எந்த அரபுச் சொல்லின் திரிபு?

 ⭐சீறத்

14)சீறா என்பதன் பொருள் என்ன? ⭐வாழ்க்கை

15)புராணம் என்பதன் பொருள் என்ன?
⭐ வரலாறு


16)யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப் புராணத்தை இயற்றினார்?

 ⭐வள்ளல் சீதக்காதி

 17)சீறாப்புராணத்தில் உள்ள மூன்று காண்டங்களின் பெயர்கள் என்னென்ன ?

⭐விலாதத்துக் காண்டம் ⭐நுபுவ்வத்துக் காண்டம்
 ⭐ஹிஜ்ரத்து காண்டம்


18)சீறாப்புராணம் எத்தனை படலங்களை உடையது?

 ⭐92

19)சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாடல்களை உடையது?

⭐ 5027

20)சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர் யார்?

 ⭐பனு அகமது மரைக்காயர்


21)உமறுப்புலவர் யாருடைய மாணவர் ?

⭐கடிகைமுத்துப் புலவர்



22)உமறுப் புலவர் எழுதிய மற்றொரு நூல் என்ன?
 ⭐முதுமொழிமாலை


23)உமறுப் புலவரை ஆதரித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

 ⭐வள்ளல் சீதக்காதி

⭐அபுல் காசிம் மரைக்காயர்


24)கொண்மூ என்பதன் பொருள் என்ன

⭐ மேகம்

25)சமம் என்பதன் பொருள் என்ன ⭐போர்

26)அரவம் என்பதன் பொருள் என்ன ⭐ஆரவாரம்

 27)ஆயம் என்பதன் பொருள் என்ன ⭐சுற்றம்

28)தழலை ,தட்டை என்பதன் பொருள் என்ன

⭐பறவைகளை  ஓட்டும் கருவிகள்

29)அகநானூறு எத்தனை புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு

⭐ 145


30)அகநானூறு எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது? ⭐களிற்றியானை நிரை

 ⭐மணிமிடைப் பவளம்

 ⭐நித்திலக்கோவை

31) அகநானூற்றின் வேறொரு பெயர் என்ன?

 ⭐நெடுந் தொகை நானூறு

32)அகநானூற்றில் பாலைத்திணை யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை??

 ⭐200

33)குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை ?

⭐80

 34)முல்லைத் திணையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?

 ⭐40

35)மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

⭐40

36)நெய்தல் திணையின் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எவ்வளவு?

⭐40

37)பிம்பம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

 ⭐பிரபஞ்சன்


38)பிரபஞ்சன் எந்த ஊரை சேர்ந்தவர்?

 ⭐புதுச்சேரி

39)பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?

 ⭐வைத்தியலிங்கம்

 40)பிரபஞ்சனின்  வானம் வசப்படும் என்ற புதினம் எப்போது சாகித்திய அகாதமி விருது பெற்றது?

 ⭐1995

41)பிரபஞ்சனின் நூல்கள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

 ⭐தெலுங்கு
⭐கன்னடம்
 ⭐இந்தி
⭐பிரெஞ்சு
⭐ஆங்கிலம்
 ⭐ஜெர்மன்


42)இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே. ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு என்ற கருத்தை கூறியவர் யார்?

 ⭐ஷேக்ஸ்பியர்



43)அகவல் ஓசை பெற்றதால் ஆசிரியப்பாவை எவ்வாறு அழைப்பர் ?

⭐அகவற்பா


44)தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு ஈடு மில்லை இணையுமில்லை தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்து இயல்களையும் கற்க முடியும் என்று கூறியவர் யார்?

⭐ரசிகமணி டி கே சிதம்பரனார்


45)டி கே சி யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிவமான தொட்டி கட்டில், ஞாயிறு தோறும் மாலை 5 மணிக்கு கூடிய கூட்டம் இலக்கியத்தைப் பற்றி பேசியது. அந்த அமைப்பு எவ்வாறு பெயர் பெற்றது?


⭐வட்டத் தொட்டி



46)டி கே சி யின் காலமென்ன?

⭐ 1882 -1954


47)டிகே சி எழுதிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 ⭐இதய ஒலி
 ⭐கம்பர் யார்?



48)எந்த நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்?

 ⭐முத்தொள்ளாயிரம் ⭐கம்பராமாயணம்


49)டி கே சி எந்தெந்த பொறுப்புகளை வகித்தார்?

 ⭐சென்னை மாநில மேலவை உறுப்பினர்

 ⭐அறநிலையத்துறை ஆணையர்


50)ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது?

 ⭐உலகப் புத்தக நாள்


51)மறைக்கப்பட்ட இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?

 ⭐எஸ் ராமகிருஷ்ணன்.















No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.