11th std Tamil book-இயல்-6-part-1


1)டைரியம் என்பது எந்த மொழிச் சொல்?
⭐இலத்தீன்


2)நாட்குறிப்புகளில் முன்னோடி என்று அழைக்கப்படும் கிரேக்க குறிப்பேடு எது?

⭐EPHEMERIDES



3)EPHEMERIDES எனும் சொல்லின் பொருள் என்ன?

 ⭐ஒரு நாளுக்கான முடிவு


4)முகலாய மன்னர்களில் எந்த மன்னரிலிருந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது ?

⭐பாபர்



5)யாருடைய ஆட்சிக்காலத்தில் நாட்குறிப்பு எழுதுவதில் தடை செய்யப்பட்டிருந்தது?

 ⭐அவுரங்கசீப்


6)வாஸ்கோட காமாவின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன?

 ⭐ஆல்வாரோ வெல்லோ


7)ஆனந்தரங்கர் எந்த பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார்?

⭐துய்ப்ளே


8)ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு கள் எத்தனை ஆண்டு கால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றது?

 ⭐25


9)பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு யார் புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார் ?
⭐கியோம் ஆந்த்ரே எபேர்


10) கியோம் ஆந்த்ரே எபேரின் தரகராக நியமிக்கப்பட்டவர் யார்?

 ⭐நைனியப்பர்


11)நைனி அப்பரின் மைத்துனர் யார்?
⭐திருவேங்கடம்


12) ஆனந்தரங்கத்தின் தந்தை யார் ?
⭐திருவேங்கடம்


13)ஆனந்தரங்கர் எங்கு ?எப்போது பிறந்தார்?

 ⭐1709 மார்ச் திங்கள் 30 , சென்னை பெரம்பூர்


14)ஆனந்தரங்கர் யாருடைய உதவியால் பரங்கிப்பேட்டை நெசவு சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்?

 ⭐அலனுவார்


15)ஆனந்த ரங்கருக்கு யாருடைய ஆட்சிக்காலத்தில் தலைமை துபாஷியாக பணியாற்றினார்?

⭐துய்ப்ளே


16)ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளது?

⭐ 12

17)உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 ⭐சாமுவேல் பெப்பிசு


18)பெப்பிசு எந்த மன்னனுடைய ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றி னார் ?

⭐இரண்டாம் சார்லஸ்


19) பெப்பிசு இரண்டாம் சார்லஸ் மன்னருடைய காலத்தின் நிகழ்வுகளை எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை நாட் குறிப்பாக பதிவு செய்துள்ளார்?

⭐  1660 - 1669


20)ஆனந்தரங்கர் எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்?

 ⭐6-9-1736 முதல் 11.1.1761



21)இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் யார்?

⭐ ஆனந்தரங்கர்


22)ஆனந்தரங்கர் உடைய எந்த நாள் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு பெற்ற உரிமையை விளக்குகிறது?

⭐10- 9-1736


23)பிரெஞ்சு கப்பல் தளபதி
லெபூர்தொனே ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை எப்போது கைப்பற்றினார் ?

⭐1746


24)லெமூர்தொனே சென்னையை கைப்பற்றியதற்காக எதிர்த்துப் போரிட்டவர் யார்?

 ⭐அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான்


25)1758 ஆம் ஆண்டு சென்னை கோட்டையை லல்லி முற்றுகையிட்டபோது சென்னையின் கவர்னராக இருந்தவர் யார்?

⭐மேஸ்தர் பிகட்


26)தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிஸில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றன என்று ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு குறித்து கூறியவர் யார்?

⭐உ.வே.சா


27)அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் முக்கியமானது முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல் ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதிவரும் பதிவை போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர் என்று குறிப்பிட்டவர் யார் ?

 ⭐வ.வே.சு



28)புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் எந்த தமிழ் மாலுமி பணியாற்றியதை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்?

⭐ அழகப்பன்


29)ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை மாதம் தேவைப்பட்டதாக ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?

⭐ 6 மாதங்கள்


30)வணிக கழகத்தின் அதிகாரியாக ஆனந்தரங்கர் யாரை குறிப்பிட்டு உள்ளார்?

⭐கொர்னே


31)ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ள வராகன்களின் பெயர்களைக் குறிப்பிடுக ?

⭐புதுச்சேரி பிறை வராகன்

 ⭐சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
⭐பரங்கிப்பேட்டை வராகன்
⭐ஆரணி வராகன்









1 comment:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.