July current affairs-2018-25 Q &A

1)மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க பாரம்பரிய அமைச்சகத்தை அமைத்துள்ள மாநில அரசு எது?

    ⚡ஒடிஷா

2)2019ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக எந்த நாட்டின் அதிபர் அழைக்கப்பட்டார்?

⚡அமெரிக்கா

3)இந்தியாவின் மீயொலி சீர் வேக ஏவுகணை எது?

⚡பிரம்மோஸ்

4)உலகிலேயே முதன்முறையாக தொலை இயக்கியால்  இயக்கக்கூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்ணோக்கி உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் ?

⚡சென்னை IIT

5) தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற உதவும் உதவியாளர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல் எது?

⚡ஆயுஷ்மான் மித்ரா

6)எல்லைப்புற சுற்றுலாவுக்கான சீமா தர்ஷன் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ள மாநில அரசு எது?

⚡குஜராத்

7)உலக விவகாரங்களில் இந்தியா அவைக்கான தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

⚡TCA ராகவன்

8)கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்குவதை முற்றாக ஒழிப்பதற்கு தொழில்நுட்ப சவாலை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

⚡வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

9)பிம்ஸ்டெக் உச்சிமாநாடு இந்த வருடம் எங்கு நடைபெற்றது?

⚡நேபால்

10)புதை உயிர்ப்படிவ அருங்காட்சியகம் தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்பட உள்ளது?

⚡அரியலூர் மாவட்டம்

11)மின்சார இழப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி என்ற திட்டத்தை தொடங்க உள்ள மாநில அரசு எது?

⚡மகாராஷ்டிரா

12)தெற்கு சூடானில் ஆயுத தடை விதிக்க ஐநா நிறைவேற்றிய தீர்மானம் எது?

⚡தீர்மானம் 2428

13)ஆயுத மோதலின் போது குழந்தைகளை பாதுகாக்க ஐநா சபையின் பாதுகாப்பு அவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் எது?

⚡தீர்மானம் 2427

14)தேசிய மாணவர் படையையும் நாட்டு நலப்பணித்திட்டத்தையும் இணைப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழு எது?

⚡அனில் ஸ்வரூப் குழு

15) 2018 fifa உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான golden ball விருது பெற்றவர் யார்?

⚡லூகா மோட்ரிக்

16)உண்ணத்தக்க காட்டுவகை காளானில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமையை கண்டறிந்துள்ள இந்திய பல்கலைக்கழகம் எது?

⚡கோவா பல்கலைகழகம்

17)தமிழகத்திலேயே முதல்முறையாக பாரம்பரிய மலர்கள் மருத்துவ மையம் எங்கு அமைய இருக்கிறது?

⚡மதுரை

18)இந்தோனேசியாவின் சபாங் துறைமுகத்துக்கு செல்லும் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் எது?

⚡ஐஎன்எஸ் சுமித்ரா

19)உலகளாவிய சுற்றுச்சூழலில் மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை கண்காணிப்பதற்காக எந்த தொழில்நுட்ப நிறு வனத்துடன் UNEP இணைந்துள்ளது?
⚡கூகுள்

20)இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் புதிய தலைவர் யார்?

⚡சந்திப் சஞ்செட்டி

21)நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதற்காக மாநிலங்களவையின் தலைவரான M வெங்கைய நாயுடு அவர்கள் எந்த நாட்டுடன்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்?

⚡ருவாண்டா

22)இணைய தொலைபேசி சேவையை தொடங்கி உள்ள இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் எது?

⚡பிஎஸ்என்எல்

23)lonely planet வெளியிட்டுள்ள 2018 ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் நான்காவது சிறந்த சுற்றுலா தலமாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய சுற்றுலாத் தலம் எது?

⚡மேற்கு தொடர்ச்சி மலைகள்

24)உலக மக்கள் தொகை தினத்திற்கான கருப்பொருள் என்ன ?

⚡குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை

25)தன்னுடைய மாநிலத்தில் வாழும் யூதர்களுக்கு அண்மையில் மத சிறுபான்மையினரின் தகுதிநிலையை வழங்கியுள்ள மாநில அரசு எது ?

          ⚡குஜராத்

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.