ஆறாம் வகுப்பு-தமிழ் -50 கேள்வி பதில்

1)தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
என்ற பாடலை எழுதியவர் யார்?

🌟கவிஞர் காசி ஆனந்தன்

2)தமிழ் கும்மி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

🌟கனிச்சாறு

3) கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?
                 ⭐8

4)என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழ் தாயின் தொன்மையை பற்றி பாடியவர் யார்?

⭐பாரதியார்

5)தமிழின் கிளவியும் அதன் ஓரற்றே
என்ற மேற்கோள் இடம்பெற்றுள்ள இலக்கியம் எது?

⭐தொல்காப்பியம்

6) இமிழ்கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இதுநீ கருதினை ஆயின்
என்ற மேற்கோள் இடம்பெற்றுள்ள இலக்கியம் எது?

⭐சிலப்பதிகாரம் (வஞ்சிக் காண்டம்)

7)நீண்ட நீண்ட காலம் நீ, நீடு வாழ வேண்டும் !
எனத் தொடங்கும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை எழுதியவர் யார்?

⭐கவிஞர் அறிவுமதி

8)ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி
என்ற பாடலை எழுதியவர் யார்?

⭐அவ்வையார்

9)நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
என்ற  வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
⭐தொல்காப்பியம்

10)கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

⭐கார்நாற்பது

11)நெடு வெள்ளூசி நெடுவசி பரந்த வடு
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
⭐பதிற்றுப்பத்து


12) கோட் சுறா எறிந்தென சுருங்கிய
நரம்பின் முடி முதிர் பரதவர்
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
⭐நற்றிணை


13)திகிரி என்பதன் பொருள் என்ன ?
⭐ஆணைச் சக்கரம்

14)சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?

⭐கப்பல் பறவை

15)கப்பல் பறவை தரையிறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
  ⭐ 400

16)கப்பல் பறவைக்கு உள்ள வேறு பெயர்கள் என்னென்ன?

⭐கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளை பறவை

17)நாராய் நாராய் செங்கால் நாராய் என்னும் பாடலை எழுதியவர் யார் ?
⚡சத்திமுத்தப் புலவர்

18)தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீராயின் எனும் அடிகள்  எதனை குறிக்கிறது?

⚡வலசை போதல்

19)எங்கிருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?

⚡ஐரோப்பா

20)சிட்டுக்குருவியின் வாழ்நாள் எவ்வளவு ஆண்டுகள் ?

⚡10 முதல் 13 ஆண்டு

21)இந்தியாவின் பறவை மனிதர் யார் ?
⚡டாக்டர் சலீம் அலி

22)சலீம் அலி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?

⚡சிட்டுக்குருவியின் வீழ்ச்சி

23)மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது !
என்று கூறுபவர் யார்?

⚡சலீம் அலி

24)உலகிலேயே நெடுந்தொலைவு (22 ஆயிரம் கிலோ மீட்டர் )பயணம் செய்யும் பறவை இனம் எது ?

⚡ஆர்டிக் ஆலா

25)பறவைகளைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?

⚡ஆர்னித்தாலஜி

26) உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?
⚡மார்ச் 20

27)சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது ?
⚡துருவப் பகுதி

28)கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

⚡எர்னெஸ்ட் ஹெமிங்வே

29)கிழவனும் கடலும் என்ற நூல் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
⚡1954

30)கிழவனும் கடலும் என்ற நூல் எந்த மொழியிலிருந்து  மொழிபெயர்க்கப்பட்டது?

⚡ஆங்கிலம்

31)2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

⚡மாரியப்பன்

32)ஔடதம் என்பதன் பொருள் என்ன ?
⚡மருந்து

33)தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல்கலாம் அவரால் பாராட்டப் பெற்றவர் யார்?
⚡ நெல்லை சு.முத்து

34)நெல்லை சு முத்து என்னென்ன நிறுவனங்களில் பணி ஆற்றினார்?
⚡விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
⚡சதீஷ் தவான் விண்வெளி மையம்
⚡இந்திய விண்வெளி மையம்

35)அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் யார்?
⚡நெல்லை சு முத்து

36)வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
என்று எழுதியவர் யார்?
⚡மகாகவி பாரதி

37)ரோபோ என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்திய நாடக ஆசிரியர் யார்?

⚡காரல் கபெக் (செக் குடியரசு)-1920


38)ரோபோ என்ற சொல்லின் பொருள் என்ன?
⚡அடிமை

39)ரோபோ தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களை போலவே செயல்களை  நிறைவேற்றும். என்று ரோபோவிற்கு விளக்கமளித்த கலைக்களஞ்சியம் எது?

⚡பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்

40)   1997 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க போட்டியில், உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ்  உடன் போட்டியிட்ட மீத்திறன் கணினியின்  பெயர் என்ன ?
      ⚡deep blue

41)உலகிலேயே முதன்முதலாக ரோபோவிற்கு குடி உரிமை வழங்கிய நாடு எது?

⚡சவுதி அரேபியா

42)சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?
⚡சோபியா

43)புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியது யார்?

⚡ஐக்கிய நாடுகள் சபை


44)மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு பிடித்த நூல்கள் எவை எவை ?
⚡திருக்குறள்
⚡லிலியன் வாட்சன் எழுதிய விளக்குகள் பல தந்த ஒளி


45)சர்சிவி ராமன் ராமன் விளைவு என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட தினம் எது ?

⚡1928 பிப்ரவரி 28


46)தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படும் தினம் எது?

⚡பிப்ரவரி 28


47)மொழியின் இறுதியில் வரும் மெய்யெழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?

⚡11,   ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ஞ்,ன்,ந்,ம்,ண்

       

48) ஞ வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் ?
                    ⚡  4

49) ய வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் ?
                  ⚡   6

50)வ வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
                   ⚡  7

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.