9th std tamil notes-25Q&A

1.உலகத் தமிழ் ஆய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?

         தனிநாயகம் அடிகள்

2.தனிநாயகம் அடிகள் தொடங்கிய எந்த இதழ்  இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது?
           
            தமிழ் பண்பாடு

3.பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
          வே.ஆனைமுத்து

4. அஞ்சல் தலைகளின் கதை என்ற நூலை எழுதியவர் யார் ?
எஸ்பி சட்டர்ஜி
(மொழிபெயர்ப்பு வி.மு. சாம்பசிவன்)

5. தங்கைக்கு என்ற நூலை எழுதியவர் யார் ?
             வரதராஜன்

6.தம்பிக்கு  என்ற நூலை எழுதியவர் யார் ?
            அறிஞர் அண்ணா

7.திங்கள்முடி சூடுமலை தென்றல் விளையாடு மலை என்ற பாடலை எழுதியவர் யார் ?

             குமரகுருபரர்

8.மகனுக்கு கடிதம் எழுதியவர் யார்?
நா. முத்துக்குமார்

9.கடித வடிவில் இலக்கியங்கள் படைத்து உள்ளவர்கள் யார் ?
      1.தாகூர்
      2. நேரு
      3. டி.கே.சி
      4. வல்லிக்கண்ணன்
      5. பேரறிஞர் அண்ணா
      6. மு வரதராசனார்
      7.அழகிரிசாமி
      8.கி ராஜநாராயணன்

10.யசோதர காவியம் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவப் பெற்றது?
             வடமொழி

11.யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்?
       தெரியவில்லை 

12.யசோதரகாவியம் எந்த நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது?
யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன்

13.யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?
              5.

14.யசோதர காவியத்தின் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு என குறிப்பிடப்படுகிறது?
             320 அல்லது 330

15.லாவோட்சு எந்த நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்?
   பொது ஆண்டுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டு

16.லாவோட்சு எந்த சிந்தனை பிரிவைச் சார்ந்தவர்?
           தாவோவியம்

17.ஒழுக்கத்தை மையமாக வைத்து சிந்தித்தவர் யார்?
         கன்பூஷியஸ்

18.இன்றைய வாழ்வில் மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனும் சிந்தனையை முன் வைத்தவர் யார்?
          லாவோட்சு

19.புதுக் கவிதைகளின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
            ந.பிச்சமூர்த்தி

20.புதுக்கவிதைக்கு உள்ள வேறு பெயர்கள் என்னென்ன?
இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இல்லாத கவிதை, கட்டுக்குள் அடங்கா கவிதை

21.நான் பிச்சமூர்த்தி ஆற்றிய பணிகள் என்னென்ன?
வழக்குரைஞர், இந்து சமய அறநிலைய பாதுகாப்புத் துறை அலுவலர்

22.நான் பிச்சமூர்த்தி என்னென்ன இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார் ?
       ஹனுமான் ,நவ இந்தியா

23. நான் பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது ?
          ஸயன்ஸூசுக்கு பலி

24.நா பிச்சமூர்த்தி எந்த வருடம் கலைமகள் இதழ் வழங்கிய பரிசு பெற்றார்?
                 1932ல்

25.பிச்சமூர்த்தியின் புனை பெயர்கள் என்னென்ன ?
              ரேவதி,பிக்ஷு

1 comment:

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.