9th std tamil Q and A

1.நாகசுரத்தில் மேல் பகுதியில் பொருத்தப்படும் சீவாளி என்ற கருவி எந்த புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது

                         நாணல்

2.நட்புக்காலம் என்ற நூலை எழுதியவர் யார் ?
          கவிஞர் அறிவுமதி

3. திருக்குறள் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
      கிருபானந்த வாரியார்

4.கையா ,உலகேஒரு உயிர் என்ற நூலை எழுதியவர் யார் ?
ஜேம்ஸ் லவ்லாக்( தமிழில் சா.சுரேஷ்)

5.சங்க காலத்தில் துணி தைப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

                துன்னக்காரர்

6.இசை நூல்கள் எவை எவை? முதுநாரை
முதுகுருகு
பெருநாரை
பெருங்குருகு
பஞ்சபாரதீயம்
இசைநுணுக்கம்
பஞ்ச மரபு


7.வருக்கை என்பதன் பொருள் என்ன?                        பலாப்பழம்

8.விருத்தப் பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது ?
       சீவக சிந்தாமணி

9.சீவக சிந்தாமணி எத்தனை இலம் பகங்களைக் கொண்டுள்ளது ?
                            13

10. மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது ?
          சீவக சிந்தாமணி

11.திருத்தக்க தேவரின் காலம் என்ன நூற்றாண்டு?
      ஒன்பதாம் நூற்றாண்டு

12.முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் யார் ?
        தெரியவில்லை

13.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்போது இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்?
       1943 ஜூலை மாதம் 9


14.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் INA வின் பொறுப்பை ஏற்க எத்தனை நாள்கள் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்?
          91 நாள்கள்

15.இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் யார்?
தில்லான் (இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவர்)

16.இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பானில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் என்ன ?

டோக்கியோ கேடட்ஸ்

17."நேதாஜியே தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்" என்று கூறியவர் யார் ?
பசும்பொன் முத்துராமலிங்கனார்

18.ஜப்பானியர்கள் யாருடைய தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கினர்?
          மோகன் சிங்

19.இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பெண்கள் படைக்குத் தலைவர் யார்?
டாக்டர் லக்ஷ்மி

20.நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக  இருந்த தமிழர்கள் யார் ?
கேப்டன் லட்சுமி
சிதம்பரம் லோகநாதன்

21.மலேயாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டி ஆக உள்ளது என்று கூறியவர் யார்? ஆங்கில பிரதமர் சர்ச்சில்

22.பேராசிரியர்  மா.சு. அண்ணாமலை எந்த நூலுக்காக தமிழக அரசின் பரிசு பெற்றார் ?
இந்திய தேசிய ராணுவம்- தமிழர் பங்கு

23.விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மன திருப்தியும் வேண்டுமா?அப்படியானால் அதற்கு விலையுண்டு .அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான் என்று கூறியவர் யார் ?
நேதாஜி

24.இந்திய தேசிய ராணுவம் 1944 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?
                   மொய்ராங்

25.வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல் நிலை அடைவான் நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்தி தான் என்று கூறியவர் யார் ?
             அப்துல் காதர்

No comments

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.