நெருக்கடி நிலை விதிகள்

                                 மத்திய நிர்வாகத் திடம் குவிந்துள்ள நெருக்கடி நிலை அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்பின் முதன்மையான இயல்புகளில் ஒன்று. குடியரசுத் தலைவருக்கு மூன்று வகையான நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த அதிகாரம் உள்ளது.

       1.இந்தியாவின் பாதுகாப்புக்கு போர் அல்லது அயல் நாட்டவரின் தாக்குதல் அல்லது ஆயுதம் ஏந்திய போராட்டத்தினால் வரும் அபாயத்தின் காரணமாக தேசிய நெருக்கடி நிலை (விதி 352 )
      2.மாநில அரசின் தோல்வியின் அடிப்படையில் மாநில நெருக்கடி நிலை விதி 356 .
      3. நிதி நெருக்கடி நிலை விதி 360

தேசிய நெருக்கடி நிலை பிரகடனம் விதி 352

            இந்தியா அல்லது இந்தியாவின் ஒரு பகுதியின்பாதுகாப்புக்கு போர் அல்லது அயல் நாட்டவரின் தாக்குதல் அல்லது ஆயுதம் ஏந்திய போராட்டத்தினால் அபாயம் ஏற்பட கூடிய நிலைமை உருவாகிறது என்று குடியரசுத் தலைவர் தெளிவாக அறிந்தால் இந்தியா முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட அந்த ஒரு பகுதிக்கு மட்டும் அவசர நிலை பிரகடனம் செய்யலாம்.அமைச்சரவை தனது ஆலோசனையை எழுத்து வடிவில் குடியரசுத் தலைவருக்கு வழங்கினால் மட்டுமே அவர் அவசர நிலையை பிரகடனம் செய்யவோ அல்லது அதனை மாற்றவோ இயலும்.விதி 352 ன் கீழ் இந்திய குடியரசு தலைவர் வெளியிடப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் நீதிபுனர்ஆய்வுக்கு உட்பட்டது.

மாநில அரசு தோல்வி பற்றிய பிரகடனம்

           356வது விதியின்படி அரசாங்கத்தை நடத்த இயலாத நிலை ஒரு மாநிலத்தில் உருவாகியிருக்கிறது என்று அந்த மாநில ஆளுநரின் அறிக்கை மூலம் அல்லது வேறு எந்த வித மாக அறிகின்ற குடியரசு தலைவர் மாநில அரசு தோல்வி பிரகடனத்தை கொண்டு வரலாம்.1.குடியரசுத் தலைவரின் மாநில அரசின் அதிகாரங்களை ஏற்றுக்கொள்கிறார் .2.மாநில சட்டசபையின் அதிகாரங்கள் மத்திய பாராளுமன்றத்திற்குச் சென்று விட்டதாக குடியரசுத் தலைவர் அறிவிப்பார்.

நிதி நெருக்கடி நிலை-விதி 360

                360ஆவது விதியின் கீழ் இதுவரை நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் படவில்லை .இந்தியாவின் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நிதி  நிலைமைக்கு அல்லது இந்தியாவின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று குடியரசுத் தலைவர் உணர்ந்தால் அவர் நிதி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யலாம்.
                       

                    

2 comments:

  1. நல்ல ஒரு விளக்கம்.. நன்றி.

    ReplyDelete
  2. அவசரநிலை பிரகடனம் அமல் படுத்தினால் என்னென்ன சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்படும் மக்களின் உரிமைகள் எதுவாக இருக்கும்
    இயல்பான வாழ்க்கை பாதிக்குமா
    வங்கி கணக்கு முடக்கப்படுமா
    மருத்துவ மனைகள் இயங்குமா
    அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா
    விளக்கம் அளித்தால் நல்லது

    ReplyDelete

9th std Tamil new book -first term QA -part 1

➡️➡️➡️CLICK  HERE TO DOWNLOAD

Powered by Blogger.